“எஃப்.ஐ.ஆர் இந்த இரண்டு வழிகளில் லீக் ஆகியிருக்கலாம்..” - காவல் ஆணையர் கொடுத்த விளக்கம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ஞானசேகரனை கோட்டூர்புரம் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். எஃப்.ஐ.ஆர் எப்படி லீக் ஆனது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அருண் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர்.
“பாதிக்கப்பட்ட மாணவி எப்படி புகார் அளித்தாரோ அதன் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. சந்தேகத்திற்கிடமான நபர்களை முதலிலேயே கண்டறிந்து குற்றவாளியை கைது செய்தோம். இதுவரை நடந்த விசாரணையில் இவர் மட்டும் தான் குற்றவாளி.
Online ல் FIR பதிவு செய்யப்பட்டிருக்கும் அதனை சில பேர் பார்த்திருக்கிறார்கள் பதிவிறக்கம் செய்திருப்பார்கள். அவர்கள் மூலமாக வெளியே சென்றிருக்கலாம். ஆனால் மாலை வரை சென்னை காவல்துறை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவில்லை என சென்னை காவல்துறை தெரிவித்து வந்தது.
ஞானசேகரன் மீது சென்னையில் 2013-ல் இருந்து 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பெண்ணை பாலியல் சீண்டல் செய்த பழைய வழக்குகள் எதுவும் இல்லை.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி உள்ளது. 56 மட்டுமே வேலை செய்கிறது.
அவர் எந்த கட்சி காரர் என்பது கவலையில்லை... குற்றம் நடக்கும்போது ஞானசேகரனின் மொபைல் Airplane modeல் இருந்துள்ளது. குற்றவாளி யாரிடமும் போனில் "சார்" எனப் பேசவில்லை. மிரட்டுவதற்காக அப்படிச் சொல்லியுள்ளான்.
பாதிக்கப்பட்ட மாணவி நன்றாக உள்ளார். இந்த மாணவி போன்று எந்தவித குற்றம் நடந்தாலும் அனைவரும் தைரியமாக புகார் அளிக்க முன் வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.