உணவகத்தில் தவறவிடப்பட்ட 25 லட்சம் ரூபாய் பணத்தை ஒப்படைத்த உணவக ஊழியரை அழைத்து மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை ஹோட்டல் ஒன்றில் சாப்பிட வந்தவர்கள் விட்டுச்சென்ற 25 லட்சம் ரூபாய் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த உணவக ஊழியர் ரவியை நேரில் அழைத்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.
அண்ணாநகரில் உணவகம் ஒன்றில் சாப்பிட வந்தவர்கள் விட்டுச்சென்ற 25 லட்சம் ரூபாய் பணம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்த உணவக ஊழியர் ரவியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

