\
காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக், பார்களை மூட உத்தரவு

காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக், பார்களை மூட உத்தரவு

காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக், பார்களை மூட உத்தரவு
Published on

காந்தி ஜெயந்தி அன்று சென்னையிலுள்ள அனைத்து டாஸ்மாக் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகின்ற அக்டோர்பர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னையிலுள்ள அனைத்து மது விற்பனைக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மதுபான விற்பனை உரிமம் கொண்ட பார்கள், ஹோட்டல்கள் என அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும், அன்றைய தினத்தில் எங்கும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனக் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். தவறினால் மதுபான விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com