ஆம்புலன்ஸ்களில் காத்திருக்காத நிலையை எட்டியுள்ளது சென்னை! - ஸ்டான்லி மருத்துவமனை களநிலவரம்

ஆம்புலன்ஸ்களில் காத்திருக்காத நிலையை எட்டியுள்ளது சென்னை! - ஸ்டான்லி மருத்துவமனை களநிலவரம்

ஆம்புலன்ஸ்களில் காத்திருக்காத நிலையை எட்டியுள்ளது சென்னை! - ஸ்டான்லி மருத்துவமனை களநிலவரம்
Published on

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி இருந்த நிலையில் அரசு ஊரடங்கை அமல்படுத்தி அதன் மூலம் தொற்று பரவலை குறைக்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் சென்னை ஆம்புலன்ஸ்களுக்கு காத்திருக்காத நிலையை எட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

சென்னையில் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. கடந்த மே 12ஆம் தேதி சென்னையில் 7500 என இருந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இன்றைய நிலவரப்படி 2762 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. 

இதனால் தற்போது சென்னையின் முக்கிய மருத்துவமனைகளின் வளாகத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலை முற்றிலும் இல்லாத ஒரு நிலை எட்டப்பட்டுள்ளது. 

முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனை வளாகத்தில் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்களில் கொரோனா தொற்றுடைய நபர்கள் காத்திருந்த அவல நிலை இருந்தது. அதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி மக்களிடையஏ அச்சத்தை வெளிப்படுத்தியது. தற்போது அந்த சில மாறியுள்ளது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com