கொரோனா விதிமுறை மீறல்: சென்னையில் 2 நாட்களில் ரூ.2 கோடி அபராதம் வசூல்!

கொரோனா விதிமுறை மீறல்: சென்னையில் 2 நாட்களில் ரூ.2 கோடி அபராதம் வசூல்!

கொரோனா விதிமுறை மீறல்: சென்னையில் 2 நாட்களில் ரூ.2 கோடி அபராதம் வசூல்!
Published on

சென்னையில் கொரோனா விதிமீறல் தொடர்பாக இரண்டே நாட்களில் சுமார் 2 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முகக்கவசம் அணியாவிடில் 200 ரூபாயும், பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு 500 ரூபாயும், நெறிமுறைகளை பின்பற்றாத சிகை அலங்கார நிலையம், உடற்பயிற்சி கூடங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்தது. அதன்படி, சென்னையில் மட்டும் கடந்த இரண்டே நாட்களில் சுமார் 2 கோடி ரூபாய் வரை வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கை மீறுவோருக்கு தினமும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com