சென்னை சிறுமி வன்கொடுமை வழக்கு: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

சென்னை சிறுமி வன்கொடுமை வழக்கு: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

சென்னை சிறுமி வன்கொடுமை வழக்கு: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
Published on

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது.

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக குடியிருப்பில் பணி செய்த லிஃப்ட் ஆப்பரேட்டர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பாபு என்பவர் உயிரிழந்துவிட்டதால் எஞ்சிய 16 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் தோட்டக்காரர் குணசேகரனைத் தவிர மற்ற அனைவரும் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com