சென்னைச் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் மரணம்..!

சென்னைச் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் மரணம்..!

சென்னைச் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் மரணம்..!
Published on

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரில் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெற்றோர், தங்கள் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த காவல்துறையினர் கடந்த ஆண்டு ஜூலை மாதம், 17 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கைதானவர்கள் மீது குண்ட‌ர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் ஒருவர் மட்டும், தனது மனுவை திரும்ப பெற்றுவிட்டார்.

இதுதொடர்பான விசாரணையில், கைது செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், 40 நாட்களுக்கு பின்னரே இந்தச் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 16 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காவலாளியான பாபு (37) என்ற அவர், சிறுநீரகக் கோளாறா‌ல் பாதிக்கப்பட்டிருந்தார். உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், காவல்துறையினர் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.‌ அங்கு சிகிச்சைப் பலனின்றி பாபு உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com