சிறுமி வன்கொடுமை: சிபிஐ விசாரிக்க வழக்கில் புதிய மனு

சிறுமி வன்கொடுமை: சிபிஐ விசாரிக்க வழக்கில் புதிய மனு

சிறுமி வன்கொடுமை: சிபிஐ விசாரிக்க வழக்கில் புதிய மனு
Published on

சென்னையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி குற்றம்சாட்டப்பட்டவர்களில் 14 பேர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்த 11 சிறுமியை, அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதன்பேரில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை, சிபிஐ-க்கு மாற்றக்கோரி குற்றம்சாட்டப்பட்டுள்ள 17 பேரில் 14 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கை ஊடகங்கள் பெரிதுபடுத்தி விட்டதாகவும், மாநில காவல்துறையினர் அவசர அவசரமாக விசாரிப்பதாகவும், மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணை நியாயமாக நடைபெறாது என்பதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com