\
சேத்துப்பட்டு ரயிலின் முன் பாய்ந்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி மரணம்

சேத்துப்பட்டு ரயிலின் முன் பாய்ந்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி மரணம்

சேத்துப்பட்டு ரயிலின் முன் பாய்ந்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி மரணம்
Published on

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண்ணை வெட்டிவிட்டு ரயில் முன்பு பாய்ந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 14ஆம் தேதி ஈரோட்டைச் சேர்ந்த தேன்மொழி மற்றும் சுரேந்தர் ஆகிய இருவரும் சென்னை சேத்துப்பட்டு இரயில் நிலையத்தில் சந்தித்து பேசினர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், தேன்மொழியை சரமாரியாக வெட்டினார்.

அதில் தேன்மொழி கை விரல் மற்றும் தாடை பகுதியில் காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் முன் பாய்ந்து சுரேந்தரும் தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவர் தலையில் பலத்த காயமும் அடைந்தார். 

பின்னர் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்த ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேந்தர் உயிரிழந்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com