உலக சாதனையை தவறவிட்டது சென்ட்ரல் ரயில் நிலையம்

உலக சாதனையை தவறவிட்டது சென்ட்ரல் ரயில் நிலையம்

உலக சாதனையை தவறவிட்டது சென்ட்ரல் ரயில் நிலையம்
Published on

உலகிலேயே நீண்ட பெயர் கொண்ட ரயில் நிலையம் என்னும் சாதனையை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு எழுத்தில் தவறவிட்டுள்ளது. 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கடந்த வாரம் புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டது. இந்தப் பெயர் மாற்றத்தில் சென்னை என்ற வார்த்தை நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. 

இந்நிலையில் உலகிலேயே அதிக எழுத்துகள் கொண்ட பெயர் பெற்ற ரயில் நிலையம் என்ற சாதனையை சென்ட்ரல் ரயில் நிலையம் தவறவிட்டுள்ளது. அதாவது தற்போது 58 எழுத்துகளை கொண்டுள்ள வேல்ஸ் ரயில் நிலையம்தான் உலகிலேயே மிக நீண்ட பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ற சாதனையை படைத்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் புது பெயர் 57 எழுத்துகளை கொண்டது. இதனால் ஒரு எழுத்தில் அந்தச் சாதனையை தவறவிட்டுள்ளது.

இதேபோல கர்நாடகாவின் கரந்திவீரா சங்கோலி ராயனா பெங்களூரூ சிட்டி ரயில் நிலையம்(.Krantivira Sangolli Rayanna Bengaluru City), ஆந்திராவின் வெங்கட நரசிம்மராஜூவரி பேட்ட ரயில் நிலையம் (Venkata narasimha rajuvari peta) மற்றும் மகாராஷ்டிரா சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினஸ் ரயில் நிலையம் (Chhatrapati Shivaji Maharaj Terminus)இந்தியாவில் நீண்ட பெயர்கள் கொண்ட ரயில் நிலையங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com