\
சென்னை: சாலையில் திடீரென தீப்பிடித்த கார் - உயிர்தப்பிய குடும்பம்

சென்னை: சாலையில் திடீரென தீப்பிடித்த கார் - உயிர்தப்பிய குடும்பம்

சென்னை: சாலையில் திடீரென தீப்பிடித்த கார் - உயிர்தப்பிய குடும்பம்
Published on

சென்னையை அடுத்த தாம்பரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், அதில் சென்றவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன், இரும்புலியூர் பாலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரின் முன்பகுதியிலிருந்து திடீரென புகை வரத் தொடங்கியதால், உடனே தனது மனைவி, மற்றும் மகனுடன் காரிலிருந்து கீழே இறங்கினார். இதையடுத்து, கார் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், உடனடியாக தீயை அணைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com