death
deathpt desk

சென்னை: முதல்வர் கான்வாய் வாகனம் சென்ற பாதையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

சென்னை காமராஜர் சாலையில் முதல்வரின் கான்வாய் வாகனம் சென்ற பாதையில் திடீரென ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Published on

செய்தியாளர்: சுரேஷ்குமார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு காரில் சென்றார். பின்னர் காரில் வீட்டிற்கு திரும்பினார்.

இந்நிலையில், சென்னை மெரீனா அருகில் ஐஸ் ஹவுஸ் காமராஜர் சாலையில் சென்ற போது ஆட்டோ ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த தக்ஷன் என்ற 5 வயது என்ற சிறுவன் பலத்த காயமடைந்தார்.

Tragedy
Tragedypt desk
death
வயநாடு பேரழிவை தொடர்ந்து தொற்றுநோய் பரவும் அபாயம்? எச்சரித்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா!

இதையடுத்து உடனடியாக அங்கிருந்தவர்கள் காயமடைந்த சிறுவனை மீட்டு ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் கால்வாய் சென்றதை தொடர்ந்து ஏற்பட்ட விபத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த மகேந்திரன் என்பவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com