700க்கும் மேற்பட்ட அரங்குகள்; 2 கோடி புத்தகங்கள் - ஜனவரி9 முதல் சென்னை புத்தகக் கண்காட்சி

700க்கும் மேற்பட்ட அரங்குகள்; 2 கோடி புத்தகங்கள் - ஜனவரி9 முதல் சென்னை புத்தகக் கண்காட்சி
700க்கும் மேற்பட்ட அரங்குகள்; 2 கோடி புத்தகங்கள் - ஜனவரி9 முதல் சென்னை புத்தகக் கண்காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 9ம் தேதி தொடங்கி ஜனவரி 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒவ்வொரு வருடமும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி 43வது புத்தகக் கண்காட்சி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜனவரி 9ம் தேதி தொடங்கவுள்ளது.

இதற்கான சின்னம், தலைப்பு, ஹேஸ்டேக் ஆகியவற்றை பபாசி நிர்வாகிகள் நேற்று வெளியிட்டனர். வரும் புத்தகக் கண்காட்சியில் 700க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, 2 கோடி புத்தகங்கள் இடம்பெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • தினமும் மதியம் 3 மணி முதல் இரவு 9 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.
  • நுழைவுக்கட்டணம் ரூ.10. இணையதளம் வழியாகவும் நுழைவுச்சீட்டு பெறலாம்
  • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுக்கட்டணம் இல்லை. அவர்களுக்கான அனுமதிச்சீட்டு கல்விநிறுவனங்களிடம் கொடுக்கப்படும்
  • மெட்ரோ ரயில் மூலம் கண்காட்சிக்கு வந்தால், பயண அட்டையை காண்பித்து இலவச அனுமதியை பெறலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com