சென்னையில் புத்தகக் கண்காட்சி வரும் 10-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். தமிழகத்தின் பல இடங்களில் நடைபெற்றாலும், சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்த கண்காட்சியை பார்த்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை புத்தக கண்காட்சிக்கு வருவார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டு கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் வரும் 10-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. மொத்தம் 708 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறும் என்று கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 10 ரூபாய் நுழைவுக்கட்டணம் என்றும், புத்தகங்களுக்கு 10 சதவிகித தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பார்வையாளர்களுக்கு உதவ ரோபோ வசதி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

