சென்னை புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்.. புத்தக பிரியர்களுக்கு விருந்து..!
புத்தகப் பிரியர்களுக்கு விருந்து படைக்கும் சென்னை புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது.
40-வது சென்னை புத்தக கண்காட்சி இன்று தொடங்கி வரும் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
கண்காட்சிக்கென சுமார் 700 அரங்குகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்களுக்கான புத்தகம், போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கான புத்தகங்கள், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து புத்தகங்கள், சிறுகதை, இலக்கியம் என லட்சக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
வீட்டுக்கு ஒரு நூலகம் இருந்தால் அது மனிதனுக்கு அறிவையும், கற்பனைத் திறனையும் மேம்படுத்த உதவும் என்று கூறுவார் காலஞ்சென்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அது சாத்தியமோ இல்லையோ, குறைந்த எண்ணிக்கையிலான நூல்களையாவது வாங்கிப் படித்து நமது சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும்