மனைவி 'டார்ச்சர்' - சொந்த காருக்கே தீவைத்து நாடகமாடிய பாஜக பிரமுகர்!

மனைவி 'டார்ச்சர்' - சொந்த காருக்கே தீவைத்து நாடகமாடிய பாஜக பிரமுகர்!

மனைவி 'டார்ச்சர்' - சொந்த காருக்கே தீவைத்து நாடகமாடிய பாஜக பிரமுகர்!
Published on

மதுரவாயலில் தனது காரை தீ வைத்து எரித்து விட்டு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக நாடகமாடி பாஜக மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1 வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (48) பிஜேபி திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள இவரது வீட்டில் நிறுத்தியிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிவதை கண்டு அக்கம்பத்தினர் தண்ணீர் ஊற்றி அனைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது காரில் வந்த ஒரு ஆணும் பெண்ணும் கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தது பதிவாகியிருந்தது.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து வசாரணை மேற்கொண்டனர். அப்போது காரை விற்று நகை வாங்கித் தருமாறு மனைவி தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் காரை எரித்து விட்டதாக போலீசாரிடம் சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 285 தீப்பற்றக்கூடிய பொருட்களை மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தே மெத்தனமாக கையாளுதல் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு சதீஸை எச்சரித்த போலீசார், அவரை காவல்நிலைய ஜாமீனில் அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com