அதிகபட்சமாக சென்னை ஆவடியில் 20 செ.மீ. மழை பதிவு
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் கனமழை பெய்துவருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி பட்டாபிராம் திருநின்றவூர் திருமுல்லைவாயல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்து வரும் கன மழை பெய்துவரும் நிலையில், அதிகபட்சமாக ஆவடியில் 20 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.
இவையன்றி பிற இடங்களில் பதிவாகியுள்ள மழையின் அளவு: ஆவடி-20 செ.மீ. ; சோழவரம்-15 செ.மீ.; திருவள்ளூர்-13 செ.மீ.; செம்பரம்பாக்கம்-12 செ.மீ.; பொன்னேரி-12 செ.மீ.; ஜமீன் கொரட்டூர்-10.9 செ.மீ.; செங்குன்றம்-10.7 செ.மீ.; தாமரைப்பாக்கம்-9.8 செ.மீ.; பூண்டி-8.8 செ.மீ.; கும்மிடிப்பூண்டி-8.7 செ.மீ.; திருவாலங்காடு-8.4 செ.மீ.; பூந்தமல்லி-7 செ.மீ.; ஊத்துக்கோட்டை-6 செ.மீ.; கண்ணன்கோட்டை-5.7 செ.மீ.; திருத்தணி-4.4 செ.மீ.; பள்ளிப்பட்டு-2.2 செ.மீ. பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன்பிறகு அவ்வப்போது காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி பலத்த மழை பெய்து வருகிறது.