சென்னை: செந்தமிழில் பேசி வாகன தணிக்கையில் ஈடுபட்டு கவனம் ஈர்க்கும் காவல் உதவி ஆய்வாளர்

சென்னை: செந்தமிழில் பேசி வாகன தணிக்கையில் ஈடுபட்டு கவனம் ஈர்க்கும் காவல் உதவி ஆய்வாளர்

சென்னை: செந்தமிழில் பேசி வாகன தணிக்கையில் ஈடுபட்டு கவனம் ஈர்க்கும் காவல் உதவி ஆய்வாளர்

செந்தமிழில் பேசி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வரும் சென்னை எழும்பூர் காவல் உதவி ஆய்வாளர். தூய தமிழில் பேசுவதால் மன அழுத்ததில் இருந்து விடுபடுவதாக அவர் கூறுகின்றார்.

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வில்லியம் தானியேல். 1988-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்த இவர், தற்போது உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், முழு ஊரடங்கு காரணமாக வாகன தணிக்கையின் போது பொதுமக்களிடம் செந்தமிழில் பேசி பணியாற்றி வருகிறார். சிலருக்கு வில்லியம் பேசும் செந்தமிழ் புரியவில்லை என்று கூறினாலும் தொடர்ந்து அதேபோல் பேசிவருவது பாராட்டை பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக செந்தமிழிலேயே பேசுவதால் அதே நடைமுறை வந்து விட்டதாக கூறுகிறார். காவல் நிலையத்தில் வழக்கு விசாரணையின் போது, குற்றவாளிகளை விசாரிக்கும் போது, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போதும் செந்தமிழில் பேசிவரும் வில்லியம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இதுபோன்று தொடர்ந்து செந்தமிழில் பேசுவதால் வாகன தணிக்கையின் போது பொதுமக்களோடு வாக்குவாதமோ, தகராறாரோ ஏற்படுவதில்லை என சொல்லும் வில்லியம், மன அழுத்தத்தை போக்கும் அருமருந்தாக தமிழ் மொழி உள்ளதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com