விபத்து நடந்த இடம்
விபத்து நடந்த இடம்புதிய தலைமுறை

சென்னை: சாலைப் பள்ளத்தால் நிலைதடுமாறி விழுந்த பைக்.. பின்னால் வந்த லாரி மோதி பெண் பரிதாப மரணம்!

பாடி - கோயம்பேடு பிரதான சாலையான 100 அடி சாலையில் சுமார் ஒரு அடி ஆழ பெரிய பள்ளம் இருந்துள்ளது. நேற்றிரவு கனமழை பெய்ததால் பள்ளத்தை தண்ணீர் சூழ்ந்து மூடியுள்ளது.
Published on

பாடி - கோயம்பேடு பிரதான சாலையான 100 அடி சாலையில் சுமார் ஒரு அடி ஆழதிற்கு பெரிய பள்ளம் இருந்துள்ளது. நேற்றிரவு கனமழை பெய்ததால்ம் அந்த பள்ளத்தை தண்ணீர் சூழ்ந்து மூடியுள்ளது. இதனால் இருசக்கரவாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

நேற்றிரவு, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த அண்ணன் தங்கையான வெங்கடேசன் - ஹேமாமாலினி, அப்பகுதியில் பள்ளம் இருப்பது தெரியாமல், அதில் வாகனத்தை இறங்கியதால் நிலைதடுமாறி விழுந்துள்ளனர்.

அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி அப்பெண்ணின் மீது ஏறி இறங்கியதால் ஹேமாமாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை மூடியுள்ளனர். நடந்த இந்த விபத்து சாலையில் இருந்த பள்ளத்தில் மழையின் காரணமாக தேங்கிய தண்ணீரால் மட்டுமே நிகழ்ந்துள்ளது என திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com