நடிகர் ஹுசைனி
நடிகர் ஹுசைனிpt desk

சென்னை | மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ஹுசைனி காலமானார்

நடிகரும் வில்வித்தை மற்றும் கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில சிகிச்சை பெற்று வந்த நிலையில், நள்ளிரவு 1.45 மணியளவில்; காலமானார்.
Published on

செய்தியாளர்: பால வெற்றிவேல்

இயக்குநர் கே.பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் சினிமா துறையில் ஹுசைனி நடிகராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார் கார்த்திக், உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளர். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 22 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நடிகர் ஹுசைனி
ஆம்ஸ்ட்ராங் முதல் வீடு தாக்குதல் வரை; கொட்டித் தீர்த்த சவுக்கு சங்கர்.. பின்னணியில் இருப்பது யார்?

இந்த நிலையில், ஹுசைனி சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.45 மணியளவில் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள், மற்றும் திரைத்துறையினர் அஞ்சலிக்காக சென்னை பெசன்ட் நகரில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திரைத் துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com