gold
goldgoogle

சென்னை | நகை பட்டறையில் 1.4 கிலோ தங்கக் கட்டிகளை திருடிச் சென்ற மேற்கு வங்க இளைஞர்!

தங்கநகை பட்டறையில் இருந்து 1.4 கிலோ தங்க கட்டிகளை திருடிக் கொண்டு ஓடிய மேற்கு வங்க இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்
Published on

செய்தியாளர்: ஆனந்தன்

சென்னை பார்க் டவுன் வால்டாக்ஸ் சாலையில் தங்க பட்டறை நடத்தி வருபவர் ஆதார் அலி. இங்கு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று இந்த தங்க பட்டறையில் வேலை செய்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சைபுல் பியடா என்பவர் 1.466 கிலோ தங்கக் கட்டிகளை திருடிக் கொண்டு ஓடி விட்டார்.

gold
goldfile

இதனை சிசிடிவியில் பார்த்த உரிமையாளர் ஆதார் அலி, உடனடியாக யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், சென்ட்ரல் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

gold
ஆம்பூர் | திருப்பரங்குன்றம் மலை கோயில் விவகாரம் - 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது

மேலும் தங்கக் கட்டிகளை திருடிக் கொண்டு ஓடியவரின் செல்போன் எண்ணை வைத்து தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com