\
சென்னை: சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னை: சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னை: சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
Published on

சென்னை குரோம்பேட்டையில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி.சாலை, சைதன்யா பள்ளி எதிரே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம் இராயபேட்டையைச் சேர்ந்த சித்திக் (22), என்பவருடையது எனவும், புதுப்பேட்டையில் மட்டன், சிக்கன் கடை நடத்தி வருவதாகவும், குரோம்பேட்டைக்கு புகாரி ஓட்டலுக்கு கறி கொடுக்க வந்த போது விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.

இருசக்கர வாகனத்தில் இருந்து புகை வந்த உடன் சித்திக் கீழே இறங்கிவிட்டதால் காயமேதுமின்றி உயிர் தப்பினார். இச்சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com