\
பள்ளி தோழியுடன் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

பள்ளி தோழியுடன் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

பள்ளி தோழியுடன் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்
Published on

அம்பத்தூர் அருகே பள்ளி தோழியுடன் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை அம்பத்தூர் பானு நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்மணி -பாலாஜி தம்பதியர். இவர்களது மகள் தனன்யா (8)அம்பத்தூர் அன்னை வயலட் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், இவருடன் படித்த கனுஷியா குடும்பத்தினருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கனுஷியா தாயார் சிந்துஜா அழைப்பின் பேரில் தனன்யா தனது தாய் கண்மணியுடன் கொரட்டுர் கருக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் குடியிருப்பில் வசிக்கும் கனுஷியாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து கனுஷியா, கனுஷியா தம்பி பிரகதீஸ் ஆகியோரை தனன்யாவை முதல் தளத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், குழந்தைகள் மூவரும் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தனன்யாவை காணவில்லை, இதையடுத்து நீச்சல் குளத்தினுள் பார்த்தபோது அவர், மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அருகிலிருந்தவர்கள் உதவியுடன் தனன்யாவை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட நிலையில், மேல் சிகிச்சைக்காக வானகரதிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையின் தாய் அளித்த புகாரின்அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com