சென்னை: வீட்டு உபயோகப் பொருட்கள் வைத்திருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

சென்னை: வீட்டு உபயோகப் பொருட்கள் வைத்திருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
சென்னை: வீட்டு உபயோகப் பொருட்கள் வைத்திருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

வானகரம் அருகே செயல்பட்டு வரும் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான மதிப்புடைய பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் சிவபூதபேடு பகுதியில் செயல்பட்டு வந்த வீட்டு உபயோகப் பொருட்கள் சேகரித்து வைக்க கூடிய குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென எரிந்து அருகே உள்ள ஆயில் குடோன் கார் உதிர pபாகங்கள் சேகரிக்கும் குடோன் டைல்ஸ் குடோன் என 5-க்கும் மேற்பட்ட குடோனில் பரவியதால் அப்பகுதி முழுவதும் தீ காடாக காட்சியளித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி, அண்ணா நகர், கிண்டி, வடபழனி ஆகிய பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இருப்பினும் 5-க்கும் மேற்பட்ட குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

இதற்கிடையே வானகரம் பகுதியில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்ததன் காரணமாக தீ ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. தீ விபத்து குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com