சென்னை: திருநம்பியுடன் நெருக்கமாக இருந்ததை கண்டித்த பெற்றோர்- மாணவி எடுத்த விபரீத முடிவு
திருநம்பியுடன் நெருக்கமாக இருந்ததை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னை ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுதா(16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக காமாட்சி என்ற திருநம்பியுடன் நட்பில் இருந்ததை சுதாவின் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியில் இருந்த சுதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது இச்சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)