\
சென்னை: காத்துக்காக கதவை திறந்து வைத்து தூங்கியவர் வீட்டில் 7 சவரன் நகை, பணம் கொள்ளை

சென்னை: காத்துக்காக கதவை திறந்து வைத்து தூங்கியவர் வீட்டில் 7 சவரன் நகை, பணம் கொள்ளை

சென்னை: காத்துக்காக கதவை திறந்து வைத்து தூங்கியவர் வீட்டில் 7 சவரன் நகை, பணம் கொள்ளை
Published on

போரூரில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியவர் வீட்டில் 7 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை போரூரை அடுத்துள்ள ஐய்யப்பன்தாங்கல், அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (38). கொத்தனார் வேலை செய்துவரும் இவர், நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டுள்ளார்.

அப்போது காற்றில்லாமல் மிகவும் வெக்கையாக இருந்ததால் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு வீட்டில் அனைவரும் தூங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று காலை மணிகண்டன் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் பணம் திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com