சென்னை: அரசு மருத்துவமனையாக மாறும் மாநகராட்சி பள்ளி... காரணம் விளக்கும் எம்.எல்.ஏ!

சென்னை: அரசு மருத்துவமனையாக மாறும் மாநகராட்சி பள்ளி... காரணம் விளக்கும் எம்.எல்.ஏ!
சென்னை: அரசு மருத்துவமனையாக மாறும் மாநகராட்சி பள்ளி... காரணம் விளக்கும் எம்.எல்.ஏ!

சென்னை பாண்டி பஜார் பிரகாசம் சாலை மற்றும் ஜி.என்.செட்டி தெரு சந்திப்பில் கடந்த 1939 ஆம் ஆண்டு முதல் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 1968 ஆண்டு இங்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு, ஏராளமான மரங்கள் மற்றும் நல்ல காற்றோட்டமான இடவசதியுடன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை மூடிவிட்டு குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என தி.நகர் தொகுதி எம்எல்ஏ ஜெ.கருணாநிதி மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு மாநகராட்சி ஆய்வு செய்யப்படுமென அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் பின்னணி என்ன என்பதை ஆராய்ந்தோம்.

இதுகுறித்து தி.நகர் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி பேசுகையில், “தி.நகர் வெங்கட் நாராயணன் சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மூடி, அருகில் உள்ள அரசு உதவி பெறும் செ.த.தியாகராயநகர் மேல்நிலையில் பள்ளியில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த மாநகராட்சி பள்ளி இருந்த பகுதி தற்போது வணிக வளாகமாக செயல்படுகிறது. சென்னை தியாகநாயகர் நகர் பகுதியில் அடுத்தடுத்து மாநாகராட்சி பள்ளிகள் மூடுவது மனதிற்கு வலியை ஏற்படுத்துகிறது. இருந்தாலும், மாணவர்கள் சேர்க்கை அதிகம் இல்லாத இந்த பள்ளி வளாகத்தில் மக்கள் பயன்படும் வகையில் மருத்துவமனை வர உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் மாணவர்களால் நிரம்பி வழிந்த அரசு பள்ளிகளை மூடுவது குறித்தும் இங்கு படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக ஆணைகளை சென்னை மாநகராட்சியும் வெளியிட்டுள்ளது.

ஆனால், இதில் பிரச்னை என்னவ இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவில்லை என்கிறார்கள். மேலும், இந்த பள்ளியை மூடுவதால் வெகுதூரம் இருக்கும் பள்ளிகளுக்கு பிள்ளைகளை தனியாக அனுப்ப முடியாது. நாங்களும் வேலையை விட்டுவிட்டு குழந்தைகளை தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்வது சிரமமாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

வசதிபடைத்தவர்கள் வாழும் இந்த பகுதியில் உள்ள பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை போதிய அளவில் இல்லை என்பதற்காக பள்ளிக் கூடத்தை மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்துள்ள மாநகராட்சி, ஏழைகள் இல்லாத இந்த இடத்தில் எதற்காக இலவச மருத்துவமனை? என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பு கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com