சென்னை: சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் - அலறியடித்து தப்பியோடிய பயணிகள்

சென்னை: சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் - அலறியடித்து தப்பியோடிய பயணிகள்

சென்னை: சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் - அலறியடித்து தப்பியோடிய பயணிகள்
Published on

சென்னை மாதவரம் அருகே சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் அலறியடித்து தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ராயபுரத்தில் உள்ள ட்ராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து வாடகை காரை ஓட்டுநர் மெய்ஞானம் என்பவர் எடுத்து கொண்டு பயணிகளுடன் ஆந்திர மாநிலம் தடா நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மாதவரம் ரவுண்டானாவை கடந்து செல்லும்போது கார் பழுதடைந்தது போல இருந்ததால் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி காரின் முன்பகுதியை திறந்த எஞ்சினை பார்க்க முற்பட்ட போது கார் திடீரென தீப்பற்றியுள்ளது.

இதனையடுத்து காரில் இருந்த பயணிகள் உட்பட 4 பேரும் கீழே இறங்கி, அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நண்பகல் உச்சி வெயிலில் கடும் அனல் காற்று வீச தொடங்கியுள்ள நிலையில் கார் முழுவதும் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக அந்த சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர்.

இதைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com