சென்னை: பணம், நகையுடன் சாலையில் கிடந்த பை... உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு

சென்னை: பணம், நகையுடன் சாலையில் கிடந்த பை... உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு
சென்னை: பணம், நகையுடன் சாலையில் கிடந்த பை... உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு

ஆவடி அடுத்த பட்டாபிராமில் மேம்பாலம் கீழே தவறவிட்ட கைப்பையை உரியவர்களிடம் உடனடியாக ஒப்படைத்த காவலரை சென்னை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

தாம்பரம் இரும்புலியூரை சேர்ந்த சுமதி வெங்கடேசன் தம்பதியினர் நேற்று பட்டாபிராமில் உள்ள அவர்களுடைய காலிமனையை பார்ப்பதற்காக பட்டாபிராம் சென்றிருந்தனர். அவர்களுடைய காலியிடத்தை பார்த்துவிட்டு தாம்பரம் செல்ல பட்டாபிராம் ஆட்டோ ஸ்டாண்ட் மேம்பாலம் அருகே நின்றிருந்தபோது, அவர்களுடைய கைப்பை கீழே தவறி விழுந்துள்ளது. இது தெரியாமல் ஷேர் ஆட்டோ ஏறி ஆவடி வரை சென்றுவிட்டனர்.


இந்நிலையில் பட்டாபிராம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் செல்வகுமார் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும்போது சாலையில் கிடந்த கைப்பையை கவனித்தார். உடனடியாக பையை கைப்பற்றி பார்த்தபோது, ரூபாய் 10 ஆயிரம், இரண்டு சவரன் நகை மற்றும் 51 சென்ட் நிலத்தின் ஒரிஜினல் பத்திரம் ஆகியவை அந்த பையில் இருந்தது.

இதையடுத்து உடனடியாக கைப்பையில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உரியவர்களிடம் உடனடியாக ஒப்படைத்தார். இதில் மகிழ்ச்சியடைந்த அந்த தம்பதியினர் அந்த காவலருக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் உடனடியாக சென்று அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் தீபா சத்யனிடம் தகவல் தெரிவித்தனர்.


இந்த தகவலை உயர் அதிகாரி சென்னை மாநகர் ஆணையாளர் மகேஷ் அகர்வால் அவர்களுக்கு தெரிவித்துள்ளார். உடனடியாக சென்னை மாநகர ஆணையாளர் பட்டாபிராம் குற்றப்பிரிவு தலைமை காவலர் செல்வகுமாரை நேரில் அழைத்து கௌரவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அதேபோல் கைப்பையை தவறவிட்ட முதியோர் இருவரும் காவலரை நெஞ்சார பாராட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com