pregnant womanpt desk
தமிழ்நாடு
சென்னை: வடமாநில கர்ப்பிணிக்கு ஓடும் ரயிலில் பிரசவம்... தாய் சேய் நலம்!
ரயிலில் பயணம் செய்த போது திடீரென கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், போலீசார் வருவதற்குள் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாய் மற்றும் சேயை, போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சங்கமித்ரா விரைவு ரயில் நேற்று மதியம் 3 மணிக்கு பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது அந்த ரயிலில் பயணித்த நிறைமாத கர்ப்பிணி மேத்தா கத்தூன் என்பவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தகவலின் பேரில் பெரம்பூர் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இருப்பினும் அவர்கள் வருவதற்குள் மேத்தா கத்தூனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
girl baby birthpt desk
இதைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் உடனடியாக தாய், சேயை 108 ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தாய் மற்றும் சேய் நலமுடன் இருப்பதாகவும், இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.