தமிழ்நாடு
உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 6 வது இடம்
உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 6 வது இடம்
உலக அளவில் செலவு குறைவான 10 நகரங்களின் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளது.
லண்டனைச் சேர்ந்த பிஸினஸ் எகானமிஸ்ட் இண்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது. அந்த அமைப்பின் இந்தாண்டுக்கான உலகின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் 4 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. பெங்களூரு 3ஆவது இடத்தையும், சென்னை 6ஆவது இடத்தையும், மும்பை 7ஆவது இடத்தையும், டெல்லி 10ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் அல்மாட்டி உலகின் மிகவும் குறைவான செலவு நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.