சென்னை: முகக்கவசம் அணியாததால் சென்றதாக 7 நாட்களில் 5,998 வழக்குகள் பதிவு
சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக கடந்த 8 ஆம் தேதியில் இருந்து நேற்று வரை 5 ஆயிரத்து 998 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தள்ளது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, என பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும், மக்கள் அதை பின்பற்றுவதாக தெரியவில்லை. இதனால் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம் காவல் துறையினால் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஏழு நாட்களில் 11லட்சத்து 99 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் ஆயிரத்து 124 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 லட்சத்து 24 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. அதே போல், தனிமனித இடைவெளி பின்பற்றவில்லை என கடந்த ஏழு நாட்களில் சென்னையில் 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 40 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.