சென்னை: கடலில் குளித்துக் கொண்டிருந்த 4 வடமாநில தொழிலாளர்கள் அலையில் சிக்கி மாயம்

சென்னை: கடலில் குளித்துக் கொண்டிருந்த 4 வடமாநில தொழிலாளர்கள் அலையில் சிக்கி மாயம்
சென்னை: கடலில் குளித்துக் கொண்டிருந்த 4 வடமாநில தொழிலாளர்கள் அலையில் சிக்கி மாயம்

சென்னை எண்ணூரில் கடலில் குளித்துக் கொண்டிருந்த 4 வடமாநில தொழிலாளர்கள் அலையில் சிக்கி காணாமல் போயினர். அவர்களை தீயணைப்புத் துறை மற்றும் மீனவர்கள் தேடி வருகின்றனர்.

சென்னை எண்ணூர் அருகே ஆண்டாள்குப்பம் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணி புரிந்து வரும் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 தொழிலாளிகள் விடுமுறை தினமான இன்று எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்பகுதிக்குச் சென்று கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது முஸ்தகீன் (22), இப்ராஹிம் (22), வஷீம் (26), புர்சான் (28) ஆகிய 4 பேர் கடல் அலையில் சிக்கி காணாமல் போயினர். இதையடுத்து காரைக்குத் திரும்பிய 12 பேரும் எண்ணூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து எண்ணூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே இந்த பகுதியில் பலமுறை கடலில் குளிக்கச் சென்றவர்கள் அலையில் சிக்கி மாயமாகியுள்ள நிலையில், காவல் துறையினர் எச்சரிக்கை பதாகைகள் வைத்தும், ரோந்து பணியில் ஈடுபட்டும் கூட இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com