சென்னை: இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும் - தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும் - தெற்கு ரயில்வே தகவல்
சென்னை: இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும் - தெற்கு ரயில்வே தகவல்

சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் டிக்கெட் கவுன்ட்டர்கள் செயல்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


கொரோனா நோய் பரவலை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதால் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இ-பாஸ் ரத்து, பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி என தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் வருகிற 7-ஆம் தேதி முதல் பயணிகள் ரயில்களை தமிழகத்தில் இயக்க, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் டிக்கெட் கவுன்ட்டர்கள் செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.


இதற்கிடையே, செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கும் நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகே பயணிகளை மெட்ரோ ரயில் நிலையத்தில் அனுமதிக்க வேண்டும் எனவும், பயணிகள் முகக்கவசம் அணிந்திருப்பதை மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும், தொற்று அறிகுறி இல்லாத நபர்களை மட்டுமே மெட்ரோ ரயிலில் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com