துண்டு துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டது சந்தியாவின் உடல் பாகங்களா ?

துண்டு துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டது சந்தியாவின் உடல் பாகங்களா ?

துண்டு துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டது சந்தியாவின் உடல் பாகங்களா ?
Published on

துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு குப்பையில் வீசப்பட்டவை, சந்தியாவின் உடல்பாகங்களா என்பது குறித்த சோதனை சென்னை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த 21ம் தேதி இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து சென்னை பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினர். 15 நாட்கள் கழித்து கடந்த வாரம் அந்த உடல்கள் கன்னியாகுமரி பூதப்பாண்டி, ஞானம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியாவின் உடல் பாகங்கள் என தெரியவந்தது. இதனையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக சந்தியாவை அவரது கணவர் துாத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற சினிமா டைரக்டர் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சென்னை ஜாபர்கான் பேட்டையில் கொலை நடந்த வீட்டில் வைத்து பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் கொலை செய்தது தெரியவந்தது. ஜாபர்கான்பேட்டை வீட்டில் இருந்து சந்தியாவின் உடலை பாலகிருஷ்ணன் மூட்டை கட்டி துாக்கிச் செல்லும் சிசிடிவி உள்ளிட்ட பல்வேறு தடயங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.

அவர் சொன்ன தகவலின் பேரில் சென்னை ஜாபர்கான் பேட்டை அடையாற்றில் வீசப்பட்ட உடலின் மற்றொரு பாகமான இடுப்பிற்குக்கீழ் உள்ள பாகத்தை போலீசார் கண்டெடுத்தனர். ஆனால் சந்தியாவின் தலை மற்றும் மற்றொரு கை இன்னும் கிடைக்கவில்லை. அவற்றை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் சந்தியாவை தான் கொலை செய்ய வில்லை என்று பாலகிருஷ்ணன் சிறைக்கு செல்லும் போது நிருபர்களிடம் கூறியபடி சென்றார்.

சந்தியாவின் இடுப்பிற்கு கீழ் உள்ள உடல் பாகத்தை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைத்து தடயவியல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உடலில் உள்ள திசுக்களை எடுத்து அது சந்தியாவினுடையதுதானா என்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையின் மூலம் ஏற்கெனவே எடுக்கப்பட்ட கால்கள் மற்றும் கைகள் பாகத்தோடு மூன்றாவதாக கண்டெடுக்கப்பட்ட பாகமும் ஒன்று தானா என்பது தெரியவரும் என அறிவியல் நிபுணர்கள் கூறினர்.  இந்நிலையில் தற்போது இரண்டாவது கட்டமாக கிடைத்த இடுப்பிற்கு கீழ் உள்ள பாகத்தை வைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவற்றின் சோதனை முடிவுகளை நீதிமன்றத்தில் போலீசார் சமர்ப்பிக்கவுள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com