\
சென்னை: வீட்டிற்கு நடந்து சென்றவரை கொடூரமாக வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்

சென்னை: வீட்டிற்கு நடந்து சென்றவரை கொடூரமாக வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்

சென்னை: வீட்டிற்கு நடந்து சென்றவரை கொடூரமாக வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்
Published on

சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடந்து சென்றவரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிக்கொன்றனர். பழிக்குப்பழியாக கொலை நடந்ததா? ஏன காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு 5-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆதி சுரேஷ் (45). இவர், மவுண்ட் ரோடு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜோதி என்ற மனைவியும் புருஷோத்தமன் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் சுரேஷ் மீது பத்து வருடங்களுக்கு முன்பு சில வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. சுரேஷ் நேற்றிரவு புளியந்தோப்பு நெடுஞ்சாலை 1வது தெரு வழியாக தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேஷை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில், சுரேஷ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போலீசார், சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com