சென்னை: ஜி.என்.செட்டி சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

சென்னை: ஜி.என்.செட்டி சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

சென்னை: ஜி.என்.செட்டி சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
Published on

சென்னை ஆயிரம் விளக்கு ஜி.என்.செட்டி சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஜி.என்.செட்டி சாலையில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 117-வது வார்டில் உள்ள எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இந்த சிலை கடந்த 2006-ஆம் ஆண்டு அதிமுக தொண்டர்களால் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். எம்ஜிஆர் சிலையின் மூக்கு பகுதி உடைக்கப்பட்டுள்ளது. இதையறிந்த அதிமுக தொண்டர்கள் சிலை முன்பு குவிந்து வருகின்றனர். இதையடுத்து சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டனர். மேலும் இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து சேதமான எம்ஜிஆர் சிலையை தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆதிராஜாராம் பார்வையிட்டுச் சென்றார். இதையடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சேதம் அடைந்த எம்ஜிஆர் சிலையை நேரில் வந்து பார்வையிட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com