சென்னை: பிரியாணி கடை உரிமையாளரை மிரட்டி மாமுல் கேட்ட அதிமுக நிர்வாகி மீது புகார்.!

சென்னை: பிரியாணி கடை உரிமையாளரை மிரட்டி மாமுல் கேட்ட அதிமுக நிர்வாகி மீது புகார்.!
சென்னை: பிரியாணி கடை உரிமையாளரை மிரட்டி மாமுல் கேட்ட அதிமுக நிர்வாகி மீது புகார்.!

சென்னை ராயப்பேட்டையில் பிரபல பிரியாணி கடை உரிமையாளரை மிரட்டி பணம் கேட்ட அதிமுக நிர்வாகி மீது சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மாமுல் கேட்டு தொலைபேசியில் உரையாடும் ஆடியோ வெளியே வந்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பகுதி அதிமுக செயலாளராக இருப்பவர் சீனிவாசன் இவர் கடந்த வாரம் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடத்துவதற்காக அப்பகுதியில் உள்ள பல்வேறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் மாமுல் கேட்டுள்ளார்.

அதேபோல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜானி ஜானி ஜான் சாலையில் உள்ள பிரபல பிரியாணி கடை எஸ்.எஸ் பிரியாணி கடையில் பொதுக் கூட்டத்திற்காக நிதி உதவி கேட்டுள்ளார். அப்போது ஆயிரமோ இரண்டாயிரமோ கொடுப்பதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஆனால் பொதுக்கூட்டத்திற்கு தேவையான அத்தனை செலவையும் உங்கள் நிறுவனம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திள்ளார். இதை ஏற்க மறுத்த பிரியாணி கடை உரிமையாளர் கிளை மேலாளரிடம் தொலைபேசியில் மிரட்டும் தோனியில் பேசி உள்ளார்.

இதனை தொடர்ந்து சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் பிரியாணி கடை மேலாளர் புகார் கொடுத்துள்ளார். மேலும் மாமூல் கேட்டு அவர் தொலைபேசியில் உரையாடும் உரையாடல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com