தமிழ்நாடு
திமுக எம்பி கனிமொழி வீட்டில் துப்பாக்கியுடன் புகுந்த நபர்
திமுக எம்பி கனிமொழி வீட்டில் துப்பாக்கியுடன் புகுந்த நபர்
சென்னையில் திமுக எம்பி கனிமொழியின் இல்லத்தில் புகுந்து மிரட்டியவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிஐடி நகர் இல்லத்தில் புகுந்த ஒரு நபர் கையில் இருந்த துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து காவலர்கள் உடனடியாக வீட்டுக்குள் புகுந்து அந்த நபரை சுற்றி வளைத்தனர். அவரது பெயர் பிரசாந்த் என்பதும் அவரது கையில் இருந்தது போலி துப்பாக்கி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்ட நபரின் பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.