சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன? - அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்

சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன? - அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்
சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன? - அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தில் மக்களின் கருத்தின்படியே நடவடிக்கை இருக்கும் என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது பேசிய மயிலம் சட்டமன்ற தொகுதி பாமக உறுப்பினர் சிவகுமார், "சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, "சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் என்பது 6 வழி சாலையாக ஏற்கனவே மாறிவிட்டது. இது ஒன்றிய அரசின் திட்டம். இத்திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதியை பெற வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.

அதே வேளையில், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக இருந்த அதே நிலைப்பாட்டில் தான் இப்போதும் நாங்கள் இருக்கிறோம்.

8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே, இத்திட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com