கானா முதல் கர்நாடக சங்கீதம் வரை... : மெட்ராஸ் மேடை

கானா முதல் கர்நாடக சங்கீதம் வரை... : மெட்ராஸ் மேடை
கானா முதல் கர்நாடக சங்கீதம் வரை... : மெட்ராஸ் மேடை

சென்னையில் நேற்று நடந்த “மெட்ராஸ் மேடை” நிகழ்ச்சி பார்வையாளர்களளை கவர்ந்து வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தியது.

சென்னை வரலாற்றில் முதல் முறையாக பாப், ராப், கானா, கிராமியம், கர்நாடிக் என பல்வேறு வகை இசைகள், ஒரே மேடையில் அரங்கேற்றப்பட்டது. அந்நிகழ்ச்சி பார்வையாளர்கள் அனைவருக்கும் வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தியது.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் கேஸ்ட் லெஸ் கலெக்டிவ் அமைப்பு உள்ளிட்ட 8 தனியிசைக் கலைஞர்களின் அமைப்புகள் சேர்ந்து மெட்ராஸ் மேடை என்ற பெயரில் சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடந்தது. இதில் எளிய மக்களின் இசை எனப்படும் கானா முதல் கர்நாடக சங்கீதம் வரை ஒரே மேடையில் ஒலித்தது அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதுமட்டுமில்லாமல் சுயமாக இசையமைத்து பாடும் ஆர்வம் கொண்ட தனியிசைக் கலைஞர்களுக்கு சிறந்த மேடையாகவும் அமைந்திருந்தது.

தன்னிசைக் கலைஞர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை பன்னாட்டு வடிவில் இருந்தாலும், மேடையில் பாடிய கலைஞர்கள் உள்நாட்டு அரசியலையும் சமூகப் பிரச்னைகளையும் பேசத்தவறவில்லை. நாட்டில் உள்ள சமூகப் பிரச்னைகளை பாடல்களாக பேசிய இந்த இசைநிகழ்ச்சி ரசிகர்களை எழுந்தாடவும் தூண்டிய சிறந்த பொழுது போக்காகவும் அமைந்திருந்தது.

தங்கள் திறமையை இந்த சமூகத்திற்கு காட்ட முடியாதா என ஏங்கித்தவித்தவர்களுக்கு பெரிய வாய்ப்பாக இந்த மேடை அமைந்துள்ளதாக கூறுகின்றனர் இதில் பங்கேற்ற கலைஞர்கள். மேலும் ஒரே மேடையில் தனியிசைக் கலைஞர்களுக்கான முதல் நிகழ்ச்சியாக இது அமைந்ததால் வாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக  அமைந்தது என்றார் இயக்குநர் பா.ரஞ்சித். பன்னாட்டு வடிவ மேடையில் உள்நாட்டு அரசியல் பற்றிய பாடல் தொகுப்புடனும் ,பொழுதுபோக்குடன் சமூகப்பிரச்னைகளும் பற்றி இந்த இசைநிகழ்ச்சியில் பேசப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com