\
இன்று உதயமாகிறது செங்கல்பட்டு மாவட்டம்

இன்று உதயமாகிறது செங்கல்பட்டு மாவட்டம்

இன்று உதயமாகிறது செங்கல்பட்டு மாவட்டம்
Published on: 

தமிழகத்தின் 37-ஆவது மாவட்டமாக செங்கல்பட்டு இன்று உதயமாகிறது.

புதிய மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி தொடங்கி வைக்கிறார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வேன்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி மையம் பின்புறம் உள்ள மைதானத்தில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மேலும், 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com