மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்த லாரி
மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்த லாரிpt desk

மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்த லாரி – டிரைவரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு

பெட்ரோல் பங்க் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி மின் ஒயரில் உரசியலில் தீப்பற்றியது. இதையடுத்து ஓட்டுநர் அருகில் இருந்த ஏரி தண்ணீரில் லாரியை இறக்கிய இறக்கிய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
Published on

செய்தியாளர்: உதயகுமார்

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அருகே உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து, தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் யுவராஜ் (40) என்பவர் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக் கொண்டு, பஜார் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது மின்கம்பிகள், லாரியில் இருந்த வைக்கோல் மீது உரசியதால் தீப்பற்றி ஏறியத்துவங்கியது.

pt desk
மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்த லாரி
வாணியம்பாடி | ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான கணவன் - விரக்தியில் விபரீத முடிவெடுத்த மனைவி!

இதை அறிந்த லாரி டிரைவர், தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தார், ஆனால், அணைக்க முடியாததால் லாரி தீப்பற்றுவதை தடுக்க அருகே இருந்தவர்களிடம் அருகே ஏரி எங்கே உள்ளது என கேட்டறிந்து, அருகே இருந்த கடுகுப்பட்டு ஏரியில் லாரியை இறக்கியுள்ளார். இந்நிலையில், லாரி டிரைவரின் சாதூரியத்தால் பெட்ரோல் பங்க் அருகே ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com