செங்கல்பட்டு: பாலாற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் சடலமாக மீட்பு

செங்கல்பட்டு: பாலாற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் சடலமாக மீட்பு
செங்கல்பட்டு: பாலாற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் சடலமாக மீட்பு

செங்கல்பட்டு பாலூர் பாலாற்றில் மூழ்கி இரண்டு பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் கிராமம் வனிகர் தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் சஞ்ஜய் (16) மற்றும் சம்பத்குமார் என்பவரின் மகன் சஞ்சய் (17) ஆகிய பள்ளி மாணவர்கள் இருவரும் நேற்று மாலை பாலூர் அருகே உள்ள பாலாற்றில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர்.

இதையடுத்து நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் சஞ்சயின் நண்பர்களை வகசாரித்துள்ளனர். இருவரும் ஆற்றில் குளிக்க சென்றதாக கூறினர். உடனடியாக பெற்றோர் பாலாற்றங்கரையில் சென்று பார்த்த போது இரண்டு மாணவர்களின் உடைகள் கரையில் இருப்பதை கண்ட பெற்றோர் குளிக்க சென்றவர்கள் காணவில்லை என்பதை உறுதி செய்து உடனடியாக பாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

காவல்துறை மூலம் செங்கல்பட்டு தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை வீர்கள் ஆற்றில் தீவிரமாக நீண்ட நேரம் போராடி இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com