தமிழ்நாடு
மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் சசிகலா தரிசனம்
மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் சசிகலா தரிசனம்
மதுராந்தகத்தில் உள்ள ஏரிகாத்த ராமர் கோயிலில் இன்று சசிகலா சிறப்பு தரிசனம் செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஸ்ரீ ஏரிகாத்த ராமர் கோயிலுக்கு வந்த சசிகலா, சிறப்பு தரிசனம் செய்தார். அதன் பின்பு கோ பூஜையில் கலந்துகொண்டு பசுவிற்கு பழங்கள் மற்றும் புல்கள் வழங்கினார்.
இதையடுத்து கோயிலில் இருந்து புறப்பட்ட சசிகலா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.