accident
accidentகோப்புப்படம்

செங்கல்பட்டு | நின்றிருந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்து – தந்தை மகள் உயிரிழப்பு

சாலையோரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை . மகள் உயிரிழப்பு மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Published on

செய்தியாளர்: உதயகுமார்

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். கார்த்திக். இவர், தனது ஏழு வயது மகள் ஜஸ்மிதா மற்றும் 6 வயது மகன் விஸ்வந்த் ஆகிய இருவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நல்லாமூர் பகுதியில் சாலையோரமாக நின்றிருந்தார். அப்போது செய்யூரில் இருந்து சித்தாமூர் நோக்கி அதி வேகமாக வந்த கார், சாலையோரமாக நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

Death
DeathFile Photo

இதில், கார்த்திக் அவரது மகள் மற்றும் மகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர் அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மூன்று நபர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கார்த்திக் அவரது ஏழு வயது மகள் ஐஸ்மிதா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் மகன் விஸ்வந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

accident
சென்னை | தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 35 சவரன் தங்க நகைகள் திருட்டு – கணவன் மனைவி மீது புகார்

இதையடுத்து தந்தை மகள் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து சித்தாமூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கொளத்தூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com