\
செங்கல்பட்டு: வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்; போலீசார் விசாரணை

செங்கல்பட்டு: வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்; போலீசார் விசாரணை

செங்கல்பட்டு: வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்; போலீசார் விசாரணை
Published on

திருப்போரூர் அருகே உள்ள வனப்பகுதியில் மர்மமான முறையில் பெண் ஒருவர் தலையில் கல் போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த காயார் வனப்பகுதி அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் தலையில் கல் போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்த காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதியில் தடயங்களை சேகரித்தனர்.

இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பெண் எந்தப்பகுதியை சேர்ந்தவர், கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அப்பெண் கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி சந்திரா என்றும் இவர் வேளச்சேரியில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் பணிபுரிபவர் என்பதும் தெரியவந்தது.

தேர்தல் பறக்கும் படையினர் முக்கிய சாலைகளில் வாகன சோதனை நடத்தி வரும் வழியில் வனப்பகுதி அருகே பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், போலீஸார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com