செங்கல்பட்டு | 5 பேரின் உயிரைப்பறித்த கோர விபத்து.. நடந்தது என்ன?

செங்கல்பட்டு வாயலூர் விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரின் உடல்கள் உடற்கூராய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து - கல்பாக்கம்
விபத்து - கல்பாக்கம்PT

செங்கல்பட்டு கல்பாக்கம் அருகே வாயலூர் விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரின் உடல்கள் உடற்கூராய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து நடந்தது எப்படி?

ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ஐந்து இளைஞர்கள் காரில் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வரும் வழியில், வாயலூரில் அருகே காரானது அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தானது நேற்று இரவு நடந்துள்ளது. மாடு ஒன்று நெடுஞ்சாலையை கடக்கும்பொழுது, மாடின் மேல் காரை ஏற்றாமல் இருக்க முயற்சித்தப்பொழுது, கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் உள்ள மரத்தின் மீது அதிவேகத்தில் மோதியதால் காரில் பயணித்த ஐவர் இறந்ததாக, உறவினர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் விபத்து எதனால் நடந்தது, அதன் உண்மையான காரணம் என்ன என்பதை சதுரங்கப்பட்டிணப் போலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களைப் பெறுவதற்காக செங்கல்பட்டு அரசு உடற்கூராய்வு மருத்துவமனை முன்பு சொந்தங்கள் கூடியிருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com