செங்கல்பட்டு: ரயில் படியில் பயணம் செய்த வடமாநில இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்

செங்கல்பட்டு: ரயில் படியில் பயணம் செய்த வடமாநில இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்

செங்கல்பட்டு: ரயில் படியில் பயணம் செய்த வடமாநில இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

மேல்மருவத்தூர் அருகே ரயில் படியில் பயணம் செய்த வடமாநில இளைஞர் தவறி விழுந்து பலி சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ரயில் நிலையம் அருகே பாண்டிச்சேரி திருப்பதி பயணிகள் ரயில் படியில் பயணம் செய்த அடையாளம் தெரியாத வடமாநில இளைஞர் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து உடனிருந்தவர்கள் அவரது கையை பிடித்து இழுத்து போராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதைத் தொடர்ந்து அவர் ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தகவலறிந்து வந்த செங்கல்பட்டு ரயில்வே காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் இவர் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் என்பதும். இவர், விழுப்புரத்தில் இருந்து படியில் பயணம் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com