\
40 சவரன் நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணை
40 சவரன் நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணைpt desk

செங்கல்பட்டு: வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணை

மதுராந்தகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: உதயகுமார்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மேகநாதன். இவர், தனது மகளின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அண்ணாநகரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலை வீட்டுக்கு வந்து கதவை திறக்க முற்பட்டுள்ளார்.

போலீசார் விசாரணை
போலீசார் விசாரணைpt desk

அப்போது பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மேகநாதன், உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுராந்தகம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

40 சவரன் நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கு - சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு

இதனைத் தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு வந்த மதுராந்தகம் காவல்துறையினர் கைரேகை நிபுணரை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com